தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய BSF வீரர்கள்! - India Pakistan

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள்!
பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள்!

By

Published : Dec 26, 2022, 11:12 AM IST

பஞ்சாப்: இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்றான பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், ஆளில்லா விமானம் ஒன்று நேற்று (டிச.25) மாலை 7.40 மணியளவில் நுழைந்துள்ளது. இதனைக் கண்ட எல்லை பாதுகாப்பு படையினர், அந்த ஆளில்லா விமானத்தை சுட்டனர். இதனையடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம், ரஜதல் என்னும் கிராமத்தில் விழுந்துள்ளது.

பின்னர் அங்கிருந்த வயலில் கிடந்த ஆளில்லா விமானத்தை எடுத்த பாதுகாப்பு படையினர், அங்கு ஏதும் போதை பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருக்கிறதா என்பதை தொடர்ந்து தேடி வருகின்றனர். இவ்வாரு பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பிஎஸ்எப் வீரர்களால் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுட்டு வீழ்த்தப்படுவதாக பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஸ்விக்கி ஆர்டரை எடுக்க சென்ற டெலிவரி பாய் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details