தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாய்க்கு தூக்கு: இளைஞர்கள் கொடூரச் செயல் - வைரல் வீடியோ - இளைஞர்கள் கொடூரச் செயல்

உத்தரபிரதேசத்தில் இரு இளைஞர்கள் சேர்ந்து நாயை தூக்கிலிட்டு கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசம்

By

Published : Nov 14, 2022, 11:39 AM IST

உத்தரபிரேசம்: காசியாபாத்தில் உள்ள இலாச்சிபூர் பகுதியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நாயை இழுத்து வரும் இளைஞர்கள் அதன் கழுத்தை இரும்பு சங்கிலியால் நெரிக்கின்றனர். மேலும் அருகில் உள்ள சுவற்றில் கம்பியை கட்டி நாயை தூக்கிலிட்டனர்.

வலி தாங்க முடியாமல் நாய் ஓலமிடுவது காண்போரின் கண்களை கலங்கச் செய்கிறது. இறுதியில் வலி தாங்க முடியாமல் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இரு இளைஞர்கள் சேர்ந்து நாயை துன்புறுத்துவதை மற்ற இருவர் வீடியோ எடுப்பதும், கண்டு கொள்ளாமல் இருப்பதும் காண்போரை கோபமடைய வைக்கிறது.

நாய்க்கு தூக்கு: இளைஞர்கள் கொடூரச் செயல்

சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாய் துன்புறுத்தப்படும் வீடியோ மூன்று மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருவதாகவும், சம்பந்தபட்ட இளைஞர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிரியாணி சாப்பிட்ட மனைவி பலி; சோகத்தில் கணவர் தற்கொலை..

ABOUT THE AUTHOR

...view details