ஹைதராபாத் (தெலங்கானா): பழைய பழமொழி ஒன்று உள்ளது. அதுஎன்னவென்றால், 'வாழ்க்கை கற்பனையை விட விசித்திரமானது' என்பது தான். அப்படி ஒரு பழமொழி பிரிட்டிஷ் அரசியல்வாதியும் இந்தியா வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக்கிற்கு நன்கு பொருந்திப் போயுள்ளது.
இங்கிலாந்தின் பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, 42 வயதான இந்திய வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக்கினை பிரதமராக அறிவித்துள்ளது. இதுதான் அவருக்கு அவரது வாழ்விலேயே மிகப்பெரிய தீபாவளி பரிசாக இருந்திருக்கக்கூடும்.
கடந்த ஒன்பது வாரங்களுக்கு முன்பு, ரிஷி சுனக் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ்ஸிடம் தோற்றபோது, சுனக்கின் ஆதரவாளர்கள் கூட அவரை இங்கிலாந்து நாட்டின் பிரதமராக எண்ணிப்பார்க்கவில்லை. அண்மையில் இங்கிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகியதும், போரிஸ் ஜான்சன் போட்டியில் இருந்து தன்னை விலக்கிக்கொண்ட நிகழ்வும் ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை நல்கின.
இங்கிலாந்து நாட்டின், 57ஆவது பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கின் பயணத்தில் அவருக்கு இந்த வாய்ப்புகள் ஒருபோதும் எளிதாக கிடைத்திருக்கவில்லை. ஆனால், அதனை தனது சுயம், முழுதைரியம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் மட்டுமே மீட்டெடுத்தார், ரிஷி சுனக்.
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்திற்கும் குடிபெயர்ந்தனர். பின், இங்கிலாந்தின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் அவரது குடும்பத்தினர் வசித்துவந்தனர்.
அவரது தந்தை இங்கிலாந்தின் சுகாதார சேவைப்பிரிவிலும், தாய் மருந்தாளுநராகவும் பணி புரிந்து மிகவும் கஷ்டப்பட்டு ரிஷி சுனக்கினை வளர்த்தனர். அவர்கள் தனது மகன் ரிஷி சுனக்கிற்கு சிறந்த கல்வியைத் தர கடுமையான போராட்டங்களை சந்திக்கவேண்டியிருந்தது.
குறிப்பாக, ரிஷி சுனக் வின்செஸ்டர் கல்லூரியில் படித்தார். பின்னர் ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் இளங்கலை தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். இதனையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர் என்னும் நன்மதிப்புடன் எம்.பி.ஏ பட்டத்தில் தேர்ச்சிபெற்றார்.
ஸ்டான்போர்டில் படிக்கும்போது, இன்ஃபோசிஸ் நிறுவனரும் கோடீஸ்வரருமான என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகளான அக்சதாவை முதன்முறையாக சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே, அக்சதா மூர்த்தியை 2009ஆம் கரம்பற்றி, இந்தியாவின் நேரடி மருமகன் ஆனார், ரிஷி சுனக். தற்போது, இத்தம்பதியினருக்கு அனோஷ்கா மற்றும் கிருஷ்ணா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் தோற்றதைவிட, அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த எம்பிஏ படிப்பினைப் படிக்கும்போது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் அவருக்கு இருந்தன. இருப்பினும், அந்த தடைக்கற்களை எல்லாம் வைராக்கியம், விடாமுயற்சியினைக் கொண்டு கடந்தார், ரிஷி சுனக். இது அவருக்கு கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டு, அனைவரும் ரசிக்கும் அந்நாட்டின் எம்.பி.யாக இருந்து, 39 வயதில் இங்கிலாந்து அமைச்சரவையில், நிதி அமைச்சராக பதவியைப் பெற்றுத்தந்தது.
அத்தருணத்தில், தனது பணிகள் மூலம் கிடைத்த சொத்துகள் மற்றும் தனது மனைவியிடம் இருக்கும் சொத்துகளைச் சேர்த்து சுமார் 730 மில்லியன் இங்கிலாந்து பவுண்டுகளுடன், அந்நாட்டின் 222ஆவது மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இணைந்தார், ரிஷி சுனக். இதற்காக அவர் கடுமையான உழைப்பினை செலுத்த வேண்டியிருந்தது.
கடந்த ஏப்ரல் 2022இல், ரிஷி சுனக் தனது மனைவியின் இந்திய குடியுரிமையினால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், அக்சதா மூர்த்தி இந்தியாவில் பிறந்தவர், அவரது பெற்றோர் இந்தியர்கள். இந்நிலையில், அக்சதா அந்நாட்டில் சம்பாதிப்பதற்கு மட்டுமே வரிசெலுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக, ரிஷி சுனக்கினை அக்சதா மணந்த பிறகும், அவர் இந்திய குடியுரிமையுடனே பணிபுரியும் விசாவில் இங்கிலாந்தில் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
மேலும், அக்சதா இந்திய குடியுரிமையுடன் இங்கிலாந்தில் பணிபுரியும் விசாவில் வசித்ததால், இன்ஃபோசிஸில் அவர் வைத்திருந்த பங்குகளில் இருந்து ஈவுத்தொகையில் சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் வரியைச்சேமிக்க முடிந்தது. இது சட்டவிரோதமானதாக இல்லாவிட்டாலும், இந்த சூழ்ச்சி ரிஷி சுனக்கிற்கு ஒரு அவப்பெயரை இங்கிலாந்து வாழ் மக்களிடையே ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அக்சதா தனது குடியுரிமை நிலையினை சரிசெய்தார். மேலும் ரிஷி சுனக், கடந்த அக்டோபர் 2021வரை அமெரிக்காவின் கிரீன் கார்டை வைத்து இருந்தது குறித்தும் செய்திகள் வெளியாகி, அவரது தேசபக்தி அந்நாட்டினரால் ஊடகங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜான்சன் என்பவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் இருந்ததை மீறி, கலந்துகொண்டதற்காக, நிதிஅமைச்சரான ரிஷி சுனக் மீது குற்றம்சாட்டப்பட்டு, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டின் காவல்துறையினரால் அவரிடம் இருந்து அபாரதத்தொகை பெறப்பட்டது.
மேலும், என்னதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரியான ரிஷி சுனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், கரோனா காலத்தில் இவர் புதுமையான திட்டம் ஒன்றைக்கொண்டு வந்து மக்களின் மனதை வென்றார். குறிப்பாக, 'வெளியில் வந்து உண்டு உதவுங்கள்' என்னும் திட்டத்தைத் தொடங்கினார்.
இத்திட்டம்மூலம் உணவகங்கள் மற்றும் பார்களில் அரசின் மானியம் பெற்ற உணவுகள் விற்கப்பட்டன. தொடக்கத்தில் இது கரோனா பரவலுக்கு வித்திடும் என விமர்சிக்கப்பட்டாலும், இத்திட்டத்தின்மூலம் மலிவான விலைகளில் உணவு மற்றும் சில பொருட்கள் கிடைத்ததால் வெற்றிகரமான திட்டமாக இது மக்களிடையே மாறியது.
அதுமட்டுமின்றி, ரிஷி சுனக் - நிதி அமைச்சர் ஆனவுடன், கரோனா பரவலின் மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். குறிப்பாக, கரோனாவில் சரிந்த பிரிட்டிஷ் பொருளாதாரத்தையும், மனித வளத்தையும் மீட்டெடுக்க நிதி அமைச்சராகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, 330 பில்லியன் பவுண்டுகளை வணிகம், பணியாளர்களுக்கான சம்பள மானியம், பணியாளர்களை தக்கவைத்தல், கரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கும் உதவுவதற்காக மட்டுமே பயன்படுத்தினார்.
மேலும் இங்கிலாந்தின் கரோனா பரவலில் நோயாளிகள் பலரை மீட்டு,அவர்களைக் காப்பாற்ற இவர் காட்டிய மும்முரம் அனைத்து தரப்பிலும் ரிஷி சுனக்கிற்கு நன்மதிப்பைப்பெற்றுத்தந்தன.
ரிஷி சுனக் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சரான போது, சில வாரங்களுக்குள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தனிமனிதர்களின் குடும்ப செலவு உயர்வு, பணவீக்க விகிதம் உயர்வு, வேலையின்மை, பெட்ரோல் - கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பிரச்னை, ஒருசில மாதங்களில் தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏறிய அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வு ஆகியப் பிரச்னைகளை திறம்பட சமாளித்தார், ரிஷி சுனக். தற்போதைய இங்கிலாந்தின் அரசியல் ஸ்திரத்தன்மை, அடிப்படையில் கஷ்டப்பட்ட குடும்பச்சூழலில் இருந்து வந்தவரை பிரதமராக்கியுள்ளது. இது ரிஷி சுனக் இங்கிலாந்தினை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பதைப் பார்க்க அனைவருக்கும் ஆவலினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தின் நிதி ஆய்வாளராகப் பணியைத் தொடங்கிய ரிஷி சுனக், இன்று இங்கிலாந்து அரசின் பிரதமராக ஆகவுள்ளார். 200 ஆண்டுகால இங்கிலாந்து சரித்திரத்தில் 42 வயதில் இளம்பிரதமர் ஆகிறார், இங்கிலாந்து வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக்...!
200 ஆண்டுகால இங்கிலாந்து சரித்திரத்தில் இளம்பிரதமராகும் ரிஷி சுனக்
இதையும் படிங்க: முதல்முறையாக இந்திய வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார்!