சந்தோலி :மதுபோதையில் முகம் முழுவதும் மணமகன் குங்குமத்தை பூசியதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
வடமாநிலங்களில் திருமண விழாவின் போது கலாட்டா நடைபெறுவது சமீபகாலமாக வழக்கமாகி வருகிறது. திருமணத்தையும் மறந்து குடிபோதையில் வரும் மணமகன்களை, பெண் வீட்டார் மற்றும் மணமகள் உள்ளிட்டோர் வறுத்தெடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது டிரெண்டாகி வருகின்றன.
வெற்றிலையுடன் பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருளை கலந்து வாயில் குதப்பியவாறு மணமேடையில் அமர்ந்து கொண்டு இருந்த மணமகனை அடித்து விரட்டி வாயில் இருப்பதை துப்பிவிட்டு வருமாறு மணமகள் மிரட்டிய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
அதேநேரம் மணமேடையில் அமர்ந்து திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன் படிக்கவில்லை என்று அறிந்து திருமணத்தை நிறுத்திய மணமகள்களும் உண்டு. அதுபோன்ற செய்திகளும் அண்மைக் காலங்களில் வெளியாகி பெண் விழிப்புணர்வுகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.
இந்நிலையில், அது போன்றதொரு சம்பவம் தற்போது உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் மனிக்பூர் கிராமத்தை சேர்ந்த வரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு வந்த மணமகள் வீட்டாரை மணமகன் வீட்டார் உற்சாக வரவேற்று இரவு விருந்து அளித்து உள்ளனர்.