ஹைதராபாத்:பாண்டிச்சேரியைச் சேர்ந்த பானி ஸ்ரீவஸ்தவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இளம் வயதில் திருமணத்தின் மீது இவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஜாலியாக இளமை பருவத்தில் இருந்து வந்தாள். அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என கனவு இருந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் திருமணம் குறித்து பெற்றோர் பேசுவார்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
நாட்கள் கழிந்தன, பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப சில வாரங்களில் அவளின் அடுத்த கட்ட வாழ்க்கை குறித்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த இன்ஜினியருடன் அவளுக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. கடிதம் அனுப்புவது, வெளியில் சென்று வருவது என நன்றாக சென்றது.
அந்த வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார். பின்னர் அவளும் டெல்லி சென்று அவளுக்கு பிடித்த ஆசிரியை பணியில் சேர்ந்தாள். இவ்வாறாக இருக்கையில், ஒரு நாள் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து கசப்பான அனுபவங்களை சந்திக்கிறாள். சகித்துக்கொள்கிறாள். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பானி தாக்கப்படுகிறாள்.
பின்னர் அவளுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, கணவர் சிகிச்சைக்கு பணம் தர மறுக்கிறார். அவளது திருமண உறவு முறிந்தது. அவளது குடும்பத்தினர் அவளுக்கு ஆதரவு தரவில்லை. "வாழ்க்கை ஒரு நரகமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் அந்த வாழ்க்கை வாழ விரும்பவில்லை. விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். எனக்கு 30 வயது , என் முழு வாழ்க்கை என்னிடம் உள்ளது என்றார்.
இந்தியாவில் விவாகரத்து விகிதம் குறைவு, ஆனால்..
மேலும், நான் மற்றவர்களை நம்புவதை விட என்னை நம்ப முடிவு செய்தேன். கசப்பான ஓர் உறவில் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது" என்று பானி கூறினார். உலகளவில் விவாகரத்து பெற்றவர்கள் சதவீதத்தின் அடிப்படையில் இந்தியாவில், விவாகரத்து சதவீதம் குறைவு. இந்தியாவில் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஓர் ஆய்வில், இந்தியாவில் 1000 திருமணங்களில் 13 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் எண்ணிக்கைகளை வைத்து, திருமணம் ஆனவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறமுடியாது. விவாகரத்து என்ற முடிவை பெண்கள் எடுக்காமல் போவதற்கான பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்திய சமூகம் விவாகரத்து பெற்றவர்கள் மீதான பார்வை, வருமானம், குடும்பத்திற்கு அவமானம் வந்து விடுமே என்ற அச்சம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனினும், முற்போக்கான சமூகத்தை நோக்கிச் செல்லும் சூழலில், தற்போது உள்ள பெண்கள் உறுதியான முடிவுகளை எடுக்கிறார்கள். அதே நேரத்தில் வேலை மற்றும் குழந்தை வளர்ப்பை நிர்வகிக்கிறார்கள். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை 51.2 மில்லியனாக இருந்த நிலையில், 2011இல் 71.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது பெண்கள் கசப்பான, சகித்துக்கொண்டு ஓர் உறவில் இருப்பதை விட தனியாக வாழ்வதை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
விவாகரத்து பற்றிய தவறான பார்வை மாற வேண்டும்