தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த இளைஞர் - நொய்டாவில் சம்பவம்

நொய்டாவில் காதலி இறந்ததாக நம்ப வைத்து தப்பியோடி திருமணம் செய்ய நினைத்த இளைஞர், காதலியுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

boyfriend
boyfriend

By

Published : Dec 2, 2022, 1:12 PM IST

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பத்புரா பகுதியைச் சேர்ந்த பாயல் என்ற இளம்பெண், அஜய் தாகூர் என்ற இளைஞருடன் முகநூல் மூலம் நட்பாகியுள்ளார். பிறகு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பாயல், பெற்றோர் இறந்த நிலையில் தனது சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தார்.

இவர்களது காதலை இரு குடும்பத்தாரும் ஏற்க மாட்டார்கள் என இருவரும் நினைத்தனர். இதனால் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அப்போதும் தங்களது குடும்பத்தினர் தேடி வரக்கூடும் என்று எண்ணிய அவர்கள், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அஜயின் தோழி ஹேமாவை கொலை செய்து, அவரது உடலை பாயலின் உடல் என்று நம்ப வைத்துவிட்டு, வெளியூருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி அஜய், பிசார்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்த தனது தோழி ஹேமாவை காதலி பாயலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து ஹேமாவை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், முகத்தில் சுடு எண்ணெய் ஊற்றி, அடையாளம் தெரியாத வகையில் சிதைத்தனர். பிறகு பாயலின் ஆடையை ஹேமாவின் சடலத்திற்கு அணிவித்தனர். பாயல் எழுதியதுபோல தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, சிதைந்த சடலம் பாயலுடையது என நினைத்து அவரது குடும்பத்தினர் தகனம் செய்தனர்.

இதனிடையே ஹேமா வீட்டுக்கு வராததால், அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பிசார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமாவை தேடிய நிலையில், பாயல் மற்றும் அஜய் தாகூரின் சதித்திட்டம் அம்பலமானது. இருவரும் 20 நாட்களுக்கு முன்பு, ஹேமாவை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து பாயல் மற்றும் அஜய் தாகூரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பாயல் தனது இரு சகோதரர்களுக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்து, பிறகு காதலன் அஜயை வீட்டிற்கு அழைத்து வந்து சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாயல், அஜய் மட்டுமல்லாமல் மேலும் பலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details