உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா இடத்தில் பிஸ்ராக் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள அடிக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இதற்கிடையில் குடியிருப்பின் 12ஆவது மாடியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின், ஆண் குழந்தைக்கு நேற்று (ஆகஸ்ட் 23) முதலாவது பிறந்தநாள்.
இதனையொட்டி குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் பிறந்தநாள் விழா ஏற்பாட்டில் பிஸியாக இருந்தனர். அப்போது தவழ்ந்து வீட்டின் வெளியே சென்ற குழந்தை 12ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. மேலும் மாடிப்படி இரும்பினால் செய்யப்பட்டிருந்தாலும், நிறைய வளைவுகள் அதில் இருந்ததால்தான் குழந்தை எளிதாக இடையே உள்ள கேப்பில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.