மும்பை: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மீது கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி அளிக்கப்பட்ட ஷோ காஸ் நோட்டீஸ் மீது நவம்பர் 17ஆம் தேதி வரை எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வருமான வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று(செப்-26) உத்தரவிட்டது.
அனில் அம்பானிக்கு எதிராக நவம்பர் 17ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் - 420 crore tax evasion without accounting
அனில் அம்பானி மீது வரும் நவம்பர் 17ஆம் தேதிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அனில் அம்பானி அவரது பெயரில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ரூ.420 கோடியை கணக்கு காட்டமால் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு வருமான வரித்துறை ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) வரிச் சட்டம் பிரிவுகள் 50 மற்றும் 51 இன் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸிற்கு எதிராக அம்பானி தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க கோரிக்கை - உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு