தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறையில் ஆர்யன் கான்.. கண்ணீரில் குடும்பம்.. இன்று பிணை கிடைக்குமா? - ஆர்யன் கான் பிணை மனு

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Aryan Khan
Aryan Khan

By

Published : Oct 26, 2021, 10:55 AM IST

மும்பை : போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கான் பிணை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு மனு செவ்வாய்க்கிழமை (அக்.26) விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக வழக்கில் பிணை கோரி ஆர்யன் கான், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க தேதி மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஆர்யன் கான்

சிறைக்குள் தந்தை-மகன் சந்திப்பு

இந்த நிலையில், சிறையில் வாடும் மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் சென்று சந்தித்தார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, சிறைக் காவலில் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 19 நாள்களுக்கு பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஷாருக் கான், வெளியே திரும்பிவரும்போது சோகத்துடன் காணப்பட்டார்.

மகனை சந்திக்க செல்லும் ஷாருக்கான்

இது தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் வெளியாகியிருந்தன. முன்னதாக ஷாருக் கான் மனைவி ஆர்யன் கானின் அம்மா கௌரி கான் காவலர்கள் பிடியிலிருந்த ஆர்யன் கானை பார்த்து கண்ணீர் சிந்தினார். இந்நிலையில், சிறையில் ஆர்யன் கானை சந்திக்க ஷாருக் கானுடன், கௌரி கான் வரவில்லை.

ஆர்யன் கான் பிணை மனு

இதற்கிடையில் ஆர்யன் கான் தாக்கல் செய்துள்ள பிணை மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்தத் தகவலை ஆர்யன் கான் வழக்குரைஞர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்தத் தகவலில், ஆர்யன் கான் பிணை மனுவை அவசர மனுவாக விசாரிக்கக் கோரினோம்.

மும்பை உயர் நீதிமன்றம்

மேலும், நீதிபதி காணொலி வாயிலாக விசாரணை நடத்தலாம் என்றும் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர் என்றார். இந்த நிலையில் ஆர்யன் கான் வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அக்.2 நடந்தது என்ன?

இந்த வழக்கு விசாரணையின்போது, ஷாருக் கான் குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி மும்பை-கோவா இடையேயான கடலில் சொகுசுக் கப்பல் ஒன்றில் விருந்து நடந்தது.

சொகுசுக் கப்பலில் விருந்து

அப்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் சிக்கினர். இதில் இருவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இவர்கள் மீது போதைப் பொருள் நுகர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை அனன்யா பாண்டே

மேலும் இந்த வழக்கில் சில நட்சத்திரங்கள் பெயர்களும் அடிபடுகின்றன. நடிகை அனன்யா பாண்டேவுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அவரிடமும் விசாரணை நடைபெற்றது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி)

முன்னதாக நடிகை அனன்யா பாண்டே போன்று நடிகர் ஷாருக் கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவல்களை ஷாருக் கான் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக மறுத்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : சிறையிலிருக்கும் ஆர்யன் கானுக்கு ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பிய குடும்பம்

ABOUT THE AUTHOR

...view details