மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் கோவிட்-19 பாதிப்பைக் கருத்தில்கொண்டு அம்மாநில உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கோவிட்-19 பாதிப்பு தொடர்பான பொதுநல மனு ஒன்று நீதிபதிகள் கங்கா புர்வாலா, குல்கர்னி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதிகள், கோவிட்-19 சூழல் மோசமாக உள்ளதைக் கருத்தில்கொண்டு அம்மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை புதிய பரிசோதனை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.