ஐதராபாத் :மும்பை ஜூஹு சதுக்கம் பகுதியில் மது போதையில் தள்ளாடியபடி பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஆட்டோவில் ஏறுவது போன்றும் பின்னர் ஓட்டுநருடன் வாதம் செய்வது போன்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கலவையான கமெண்டுகள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், இது குறித்து உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கதார் இரண்டாம் பாகம் வெற்றியை தொடர்ந்து, சபார் என்ற படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்து வருகிறார். மராத்தி படமனா பிரவாஸ் படத்தி ரீமேக்காக பாலிவுட்டில் சபார் என்ற தலைப்பில் படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஷஷாங்க் உத்ரபூர்கர் இயக்குகிறார். இந்த படத்திற்கான சூட்டிங்கின் போது மதுபோதையில் இருப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்ததாகவும், தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்றும் நடிகர் சன்னி தியோல் விளக்கம் அளித்து உள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தான் குடிப்பதில்லை என்றும் மக்களால் எப்படி மதுவை ரசித்து குடிக்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் மது கசப்பானதாகவும் துர்நாற்றம் வீசக் கூடியதாகவும், தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சன்னி தியோல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான், மும்பை ஜூஹு சதுக்கம் பகுதியில் மதுபோதையில் தள்ளாடியபடி சன்னி தியோல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் வீடியோ டீப் பேக் முறையில் தயாரிக்கப்பட்டது என்றும் ஒரு சிலர் சன்னி தியோல் உண்மையாகவே மது அருந்தி இருக்கலாம் என்றும் கமெண்ட் செய்து உள்ளனர்.
அண்மையில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான கதார் இரண்டாம் பாகம் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அமீர் கானின் லாஹூர் 1947 என்ற படத்தில் சன்னி தியோல் நடிக்க உள்ளார். இந்த படத்தை காயல், கடாக் உள்ளிட்ட படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார்.
இதையும் படிங்க :ஜம்மு காஷ்மீர் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்?