தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இவ்வளவு கோபம் கூடாதுங்க.. ரசிகரின் போனை தூக்கி வீசிய நடிகர் ரன்பீர் கபூர்! - Ranbir viral video

செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

By

Published : Jan 28, 2023, 11:00 PM IST

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். அண்மையில் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து இருந்தார். தற்போது தூ ஜூதி மெயின் மக்கார் என்ற பாலிவுட்டில் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை ஆலியா பட் - ரன்பீக் கபூர் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் சர்ச்சையில் ரன்பீர் கபூர் சிக்கி உள்ளார்.

அண்மையில் படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்த ரன்பீர் கபூரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரன்பீரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இரண்டு மூன்று முறை ரன்பீருடன், ரசிகர் செல்பி எடுக்க முயன்ற நிலையில், செல்போன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடுப்பாகி போன ரன்பீர் கபூர், தான் போட்டோ எடுப்பதாக ரசிகரிடம் இருந்து செல்போன் வாங்கி, நொடடிப்பொழுதில் அதை பின்னோக்கி தூக்கி வீசினார். இந்த சம்பவத்தால் குழுமியிருந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் வாயடைத்து போகினர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ரன்பீர் கபூருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் பலர் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், நடிக்க வந்த காலத்தில் ரசிகர்களிடம் அன்பாக பழகி வந்த ரன்பீர் கபூர் தற்போது நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாய் பிரண்டுடன் வராவிட்டால் கெட் அவுட்.. கல்லூரி நிர்வாகம் பெயரில் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details