ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டுடு என்ற இடத்தில் கிணற்றில் 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும், டூடு ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலகம் (SHO), காவலர்கள் குழுவுடன், கிணற்றிலிருந்து உடல்களை மீட்கச் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.
இந்நிலையில் இறந்த மூன்று பெண்களும் சகோதரிகள், கலு தேவி (25) மம்தா தேவி (23) கமலேஷ் (20) மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை நான்கு வயது, மற்றொரு 20 நாட்களே பச்சிளம் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த மே 25 அன்று டூடு காவல்நிலையத்தில் மூன்று சகோதரிகள் காணாமல் போனது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தேடி வந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் உறவினர் தெரிவிக்கையில், மூன்று சகோதரிகளுக்கும் ஒரே வீட்டில் திருமணம் நடந்ததாகவும், மூன்று பெண்களின் மாமியார் மற்றும் கணவர்கள் அவர்களை துன்புறுத்துவது வழக்கம். சகோதரிகள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும், பின்னர் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், எனவே சகோதரிகள் தங்கள் தாய் வீட்டிற்கு சென்றனர். மன அழுத்தத்தின் காரணமாக சகோதரிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறினர்.
இப்படி இருக்கையில் இதற்கு முன்னதாகவே இறந்தவரின் சகோதரர், வரதட்சணைக்காகத் தனது சகோதரிகள் மாமியார்களால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, பியுசிஎல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆன்லைனில் எலக்ட்ரிக் ரம்பம் வாங்கிக் கொலை.. ஐ.டி. ஊழியர் வழக்கில் பகீர் தகவல்கள்!