தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊடக நிறுவனங்களில் ஐடி ரெய்டு- பல்வேறு தரப்பினர் கண்டனம்

டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் ஆகிய ஊடகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று நடத்திய சோதனையானது, ஊடகங்களை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

'Blot on democracy,' Congress flays govt for IT raids on media houses
ஊடக நிறுவனங்களில் ஐடி ரெய்டு- பல்வேறு தரப்பினர் கண்டனம்

By

Published : Jul 23, 2021, 12:30 PM IST

டெல்லி:டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் ஆகிய ஊடகங்களின் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய ஊடகவியலாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு(The Committee to Protect Journalists ), டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் ஆகிய இரு ஊடகங்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையானது ஊடகங்களை அச்சுறுத்தும் செயல் என்றும், இதை இந்திய அரசு நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

காங்கிர்ஸ் கண்டனம்

வருமான வரித்துறையின் இந்த சோதனையை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, " நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் ஒரு கோரமான வடிவம் குறித்து நாங்கள் பேசுகிறோம்.

ஒன்றிய அரசின் செயலை நாங்கள் கண்டிக்கிறோம், இதை அம்பலப்படுத்துகிறோம். ஒன்றிய அரசின் இந்தப்போக்கை நிறுத்த நீடித்த பரப்புரையும், அனைத்து தரப்பினரின் கண்டனமும் தேவை" என்றார்.

சோதனைக்கான காரணம்

டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் ஆகிய இரு செய்தி நிறுவனங்களும் கரோனா இரண்டாம் அலையில் மக்கள் பட்ட பாடுகளையும், அரசின் தோல்விகள் குறித்தும் பல செய்திகளை வெளியிட்டிருந்தன. இதனால்தான் அந்நிறுவனங்கள் மீது வருமானி வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இருப்பினும், ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த வருமான வரித்துறை சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.


இதையும் படிங்க:
'சமூக ஊடகங்கள் கண்காணிப்பு அச்சுறுத்தல்: பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கு' - திருமா கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details