தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவுடன் கைகோர்த்தார் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி - மேற்கு வங்கம் தேர்தல்

கொல்கத்தா: பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரதமர் மோடி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

BJP
கொல்கத்தா

By

Published : Mar 7, 2021, 3:16 PM IST

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று(மார்ச்.7) கொல்கத்தாவில் உள்ள படை அணிவகுப்பு மைதானத்தில் பாஜகவின் பரப்புரை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரதமர் மோடி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்தார்.

மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தவர். ஆனால், பின்னர் அரசியலிலிருந்து விலகி விட்டார். தற்போது, 70 வயதான அவர், அரசியலில் மீண்டும் இணைந்து பாஜகவுடன்களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தலைசிறந்த பெண் விருதுக்கு தலை வணங்கிய தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details