தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி - Congress

பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 50 விழுக்காடு வரை ஏற்றம் கண்டுள்ளது, உங்கள் நிலை என்ன என்று நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Aug 28, 2021, 5:14 PM IST

டெல்லி: ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (Association for Democratic Reforms) அறிக்கைகள் அண்மையில் வெளியாகி இருந்தன.

இதனை மேற்கொள்காட்டி சனிக்கிழமை (ஆக.28) ராகுல் காந்தி பாஜக மீது ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி கேள்வி

அதில், “2019-20ஆம் ஆண்டில் பாஜக வருமானம் ரூ.3 ஆயிரத்து 623.28 கோடியாக உள்ளது. இதில் பெரும்பகுதி வருமானம் தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக திரட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாஜக வருமானம் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதேபோல், உங்கள் வருமானம் அதிகரித்துள்ளதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்

ஏடிஆர் அறிக்கையின்படி பாஜக 1,651.22 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.682.21 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் செலவு ரூ.998.21 கோடியாக உள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள்

தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக அதிக நிதி திரட்டிய கட்சியில் தேசிய கட்சியான பாஜக முதலிடத்தில் உள்ளது. பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திமுக என ஒட்டுமொத்த கட்சிகள் பெற்ற நன்கொடை வருமானம் ரூ.4 ஆயிரத்து 758.206 கோடி ஆகும்.

இதில் அதிகப்பட்சமாக பாஜகவுக்கு ரூ.3 ஆயிரத்து 623.28 கோடி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த வருமானத்தில் 76.15 விழுக்காட்டை பாஜக பெற்றுள்ளது. ரூ.682.21 கோடி வருவாய் உடன் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த வருவாயில் 14.34 விழுக்காடு ஆகும்.

எதிர்க்கட்சிகள் வருமானம் சரிவு

இந்தப் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.6.581 கோடி வருமானம் கிடைத்துள்ளது தெரியவருகிறது. அந்த வகையில் 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் பாஜக வருமானம் 50.34 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 25.69 விழுக்காடு சரிந்துள்ளது.

ராகுல் காந்தி ட்வீட் (நல்ல நாள்கள் மக்களுக்கு அல்ல, மோடிக்கு.. இந்தியா விற்பனைக்கு)

பாஜகவுக்கு 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 410.08 கோடி வருவாய் கிடைத்திருந்தது. காங்கிரஸை போன்று பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வருமானமும் சரிவை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக மற்றொரு ட்வீட்டில் ராகுல் காந்தி, “வளர்ச்சியும், நல்ல நாள்களும், புதிய இந்தியாவும் மோடியின் நண்பர்களுக்கானது. முதலில் பொதுத்துறை விற்கப்படும். அதன்பிறகு இந்தியாவே விற்கப்படும். இதெல்லாம் மோடி நண்பர்களுக்காக..” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தேர்தல் நிதி பத்திரம்- தள்ளாடும் காங்கிரஸ், வாரி சுருட்டும் பாஜக!

ABOUT THE AUTHOR

...view details