உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த செவ்வாய் கிழமை (செப்.5) நடைபெற்றது. இதில், 55.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இத்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதில், பா.ஜ.கவை சேர்ந்த பார்வதி தாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
பாகேஷ்வர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் உயிரிழந்ததால் தற்போது, இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 2007 முதல் தொடர்ந்து நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் சந்தன் ராம் தாஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரகாண்ட் பாகேஷ்வர் தொகுதியில் நடைபெறும் இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாகேஷ்வர் தொகுதி இடைத்தேர்தலில் சந்தன் ராம் தாஸ் மனைவி பார்வதி தாஸ்யை வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியது. மேலும் காங்கிரஸின் பசந்த் குமார், சமாஜ்வாடி கட்சியின் பகவதி பிரசாத், உத்தரகாண்ட் கிராந்தி தளத்தின் அர்ஜுன் குமார் தேவ் மற்றும் உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் பகவத் கோஹ்லி ஆகிய வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இங்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதினர்.
இதையும் படிங்க:கேரளாவில் ஆளுங்கட்சியை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி.. கோட்டயத்தில் கொண்டாட்டம்!