தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5 மாநில பேரவைத் தேர்தல்: டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் குழுக்  கூட்டம் - BJP national president JP Nadda

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

பாஜக தேசிய நிர்வாகிகள் குழு  கூட்டம்
பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம்

By

Published : Oct 18, 2021, 1:48 PM IST

டெல்லி: ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று (அக். 18) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜெ.பி. நட்டா தலைமையில் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வியூகம் வகுக்கவும், நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலப் பொறுப்பாளர்கள், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவின் எழுச்சியைப் பொய் வழக்குகளால் முடக்க திமுக முயற்சி'

ABOUT THE AUTHOR

...view details