புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் என, மொத்தம் 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி கட்சி சார்பில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதற்கிடையே முதலமைச்சர் ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பால், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு மூலம் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, தனது பலத்தை 9 ஆக பாஜக உயர்த்தியது.
அதில் துணை முதலமைச்சர் பதவியும் அடங்கும். துணை முதலமைச்சர் பதவி புதுச்சேரியில் இதுவரை இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். துணை முதலமைச்சர் பதவியை பாஜகவுக்குக் கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை எனக் கருதப்பட்டது.