தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் 88 வயது 'மெட்ரோ மேன்' - BJP announces E Sreedharan

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக 88 வயதான 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் களமிறக்கப்பட்டுள்ளார்.

மெட்ரோ மேன்
மெட்ரோ மேன்

By

Published : Mar 4, 2021, 4:32 PM IST

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பாஜகவில் சேர்ந்த ஸ்ரீதரனை, அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் கொங்கன் ரயில்வே, டெல்லி மெட்ரோ என நாட்டின் பொது போக்குவரத்தின் முகத்தையே மாற்றி அமைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

கடந்த 1995 முதல் 2012 வரை, கொங்கன் ரயில்வே, டெல்லி மெட்ரோ ஆகிய திட்டங்களின் நிர்வாக இயக்குநராக ஸ்ரீதரன் பொறுப்பு வகித்தார். பின்னர், உடல்நிலையை காரணம்காட்டி, லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முதன்மை ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இப்படி, நாட்டின் போக்குவரத்துத்துறையில் முக்கிய பங்காற்றிய இவர், அரசியலில் தடம் பதிக்க முயற்சி எடுத்துவருகிறகிறார். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் கால் பதிக்க பாஜக பல ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி செய்துவரும் குஜராத்தை காட்டிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகமான ஷாகா கேரளாவில்தான் அதிகமாக இயங்கிவருகின்றன. இருப்பினும், அங்கு மூன்றாவது கட்சியாகவே பாஜக உள்ளது. இந்த நிலையில், பாஜகவை ஆட்சியில் அமரவைத்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதே தனது லட்சியம் என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details