தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதியவரின் வயிற்றில் "கருப்பை".. கிட்சி சிகிச்சையில் வெளியான ஷாக்.. - ஆண் வயிற்றில் கருப்பை

கிட்சி சிகிச்சைக்காக சென்ற முதியவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபோது, அவரது வயிற்றில் கருப்பை இருந்ததாக சோனோகிராஃபர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதியவரின் வயிற்றில் "கருப்பை".. கிட்சி சிகிச்சையில் வெளியான ஷாக்..
முதியவரின் வயிற்றில் "கருப்பை".. கிட்சி சிகிச்சையில் வெளியான ஷாக்..

By

Published : Feb 27, 2023, 4:05 PM IST

சப்ரா: பிகார் மாநிலம் சப்ராவில் உள்ள சதார் மருத்துவமனையில், கிட்சி சிகிச்சைக்காக சென்ற முதியவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபோது, அவரது வயிற்றில் கருப்பை இருந்ததுள்ளதாக தெரிகிறது. இதனால் சோனோகிராஃபர் கருப்பை இருப்பதாக குறிப்பிட்டு ரிபோர்ட் கொடுத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த முதியவரும் குடும்பத்தாரும் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபோது உண்மை வெளிவந்தது.

சப்ராவில் வசித்துவரும் பாதே மியான் என்னும் 60 வயது முதியவர், பல ஆண்டுகளாக கிட்சி கோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி கிட்சிக்கான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து, அதன் ரிப்போர்ட்டை மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில், சப்ராவில் உள்ள சதார் மருத்துவமனையில் நேற்று (பிப்.26) அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்துள்ளார்.

இந்த ஸ்கேன் முடிவுகளில் அவரது வயிற்றில் கருப்பை இருந்ததாக சோனோகிராஃபர் (ஸ்கேன் கருவிகள் நிபுணர்) ரிப்போர்ட் கொடுத்துள்ளார். இந்த ரிப்போர்ட்டை அவர் மருத்துவரிடம் காண்பித்தப்போது, அவர் கருப்பை விவரத்தை முதியவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவரும், அவரது குடும்பத்தினரும் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்துபார்த்தபோது அப்படி ஏதுமில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. முதல்கட்ட தகவலில், கர்ப்பிணிகளுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பழக்கப்பட்ட சோனோகிராஃபர் தவறுதலாக கருப்பை இருந்ததாக குறிப்பிட்டு முதியவருக்கு ரிப்போர்ட வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி.. என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது.. 7 டிப்ஸ்..

ABOUT THE AUTHOR

...view details