தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்தவருக்குப் பதவி உயர்வா..! - அதிர்ச்சியளித்த பிகார் அரசு - பிகாரில் அரசு மருத்துவர்கள்

பாட்னா: இறந்த அரசு மருத்துவருக்கு, பிகார் சுகாதாரத் துறை பதவி உயர்வு வழங்கிய சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bihar
பாட்னா

By

Published : Mar 9, 2021, 8:51 PM IST

பிகாரில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பிக்ரம்கஞ்ச் துணைப்பிரிவு மருத்துவமனையின் பொறுப்பாளராக பணியாற்றியவர் ராம்நாராயண் ராம். இவர் கடந்த பிப்.7 ஆம் தேதி, உயிரிழந்தார். அவருக்கு, மருத்துவர்கள் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பிகாரில் அரசு மருத்துவர்களுக்குப் பதிவு உயர்வு வழங்கப்பட்ட சுற்றறிக்கை வெளியானது. அதில், இறந்த ராம்நாராயண் ராம் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டு மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கடிதத்தில், சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் அனில் குமாரின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக, சுகாதாரத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், புதிய பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், சுகாதாரத் துறையின் அலட்சியத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதையும் படிங்க:'கோவாக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவுகளே இல்லை' - லான்செட் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details