தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார்: மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்! - Girl forced into sex trade

பிகார் மாநிலத்தில் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெற்றோரால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி: பீகாரில் கொடூரம்
பெற்றோரால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி: பீகாரில் கொடூரம்

By

Published : Jul 1, 2022, 8:50 PM IST

பிகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவரை அவளது பெற்றோர் மற்றும் மாமா பணத்துக்காக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், பலரால் அச்சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பேசி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த சிறுமி பேசிய வீடியோவில், ”எனக்கு தினமும் இப்படித்தான் நடக்குது. உதவிக்கு யாருமில்லை. போராட்டம் நடத்தினால் கொலைமிரட்டல் வரும். அம்மா, அப்பா, மாமா எல்லோரும் பணத்துக்காக என்னை வற்புறுத்தினார்கள். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் காவல் நிலைய அலுவலர்கள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

மேலும் வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு என்னை பலாத்காரம் செய்தனர். நான் சோர்வாக இருக்கிறேன். எனக்கு உதவுங்கள். சரியான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், குடும்ப உறுப்பினர்களால் விரைவில் நான் கொல்லப்படலாம்" என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, இது தொடர்பாக பெற்றோர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தற்போது மகளிர் காவல் நிலைய காவலில் உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பலர் அடையாளம் தெரியாததால் விசாரணை சற்று கடினமாக இருக்கிறது. பலர் அவள் வசிக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள். அந்த சிறுமி தன் காதலனிடம் இதுபற்றி கூறியும், அவன் காவல் துறையினரிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், காதலன் மீது புகார் எதுவும் இல்லை. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்ப மாட்டார்கள்", எனக் கூறினார்.

இதையும் படிங்க:அடர்ந்த காடு... நீடித்த இருள்...'டோலி' கட்டி 8 கி.மீ. தூரப்பயணத்தில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணி!

ABOUT THE AUTHOR

...view details