டெல்லி: பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையபெற்றுள்ள நிலையில், பிகார் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து பேசினார்கள்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிகார் துணை முதலமைச்சர்கள் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தன. இது குறித்து தர்கிஷோர் பிரசாத் ட்விட்டரில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் நானும், ரேணு தேவியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தோம். அப்போது ரேணு தேவி, குடியரசுத் தலைவருக்கு புத்தகங்களை பரிசளித்தார். நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கலந்தோசித்தோம்” எனத் தெரவித்துள்ளார்.