கோபால்கஞ்ச் (பிகார்): பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் 4 வயது சிறுவனை கடித்த நாகப்பாம்பு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாம்பு கடித்ததில் நல்வாய்ப்பாக சிறுவன் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிறுவனின் தாய் கிரண் தேவி கூறுகையில், "என் மகன் அனுஜ் குமார் நேற்று (ஜூன் 22) மாலை கஜூரி கிழக்கு தோலாவில் உள்ள வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நாகப்பாம்பு (கோப்ரா) கடித்துள்ளது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த போது, பாம்பு கடித்ததையறிந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவன் குணமடைந்து வருகிறான்" என்றார்.