தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவுடன் நிதிஷ் சந்திப்பு! - டி ராஜா

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

Bihar
மக்களவை

By

Published : Apr 13, 2023, 7:59 PM IST

டெல்லி: 2024ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மத்திய பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒத்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

நேற்று(ஏப்.12) பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அதில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நிதிஷ்குமார் தெரிவித்தார். மோடி அரசை அகற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் நேற்று மாலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், நிதிஷ்குமாரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றும், மோடி அரசை அகற்ற தாங்களும் துணை நிற்போம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று(ஏப்.13) நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார். நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து இரு தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் மேலும் சில எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்த பிரதமர் யார்? - மவுனம் காக்கும் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மல்லிகார்ஜூன கார்கே!

ABOUT THE AUTHOR

...view details