பாட்னா: CTET மற்றும் BTET ஆகிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வாளர்கள் வேலை கேட்டு பாட்னாவின் டாக் பங்களா சௌராஹா தெருக்களில் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
அந்த வீடியோவில், மாவட்ட துணை ஆட்சியரும், சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரியான கே.கே.சிங், போராட்டக்காரர் ஒருவரை தடியால் தாக்குகிறார். போராட்டம் செய்த தேர்வர்கள் கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு போராட்டம் செய்தனர். இந்நிலையில் இவர் தாக்கிய தேர்வாளர் தரையில் கிடக்கிறார். அவரை அந்த துணை ஆட்சியர் தடியால் அடிக்கிறார். இந்த தாக்குதலில் அவரது முகம் மற்றும் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து, வலியால் துடிப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.