தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது! - 11 பேர் கைது

பிகார் மாநிலம் அவுராங்கபாத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிகாரில் கள்ளச்சாரயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது!
பிகாரில் கள்ளச்சாரயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது!

By

Published : May 26, 2022, 10:36 AM IST

பாட்னா(பிகார்):. பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து பிகார் மதுவிலக்கு துறை அமைச்சர் சுனில் குமார் கூறுகையில், ‘விஷ சாராயம் குடித்து இறந்தது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நிர்வாகம் காத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் ''இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தவர்களின் அனைவரின் உடல்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், இதன் மூலம் முழு ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். காவல்துறையின் நடவடிக்கையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்டோர் அவுரங்காபாத்தில் பிடிபட்டுள்ளனர்" என்று குமார் கூறினார்.

முதல்கட்ட விசாரணையில், அண்டை மாநிலமான ஜார்கண்டில் இருந்து கள்ள சாராயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளதாக . அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சவுரப் ஜோர்வால் தெரிவித்தார்.

இதனிடையே கயாவில் உள்ள படாரா கிராமத்தில் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இறந்த நான்காவது நபரின் பெயர் கைலாஷ் யாதவ். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படிங்க:ஜம்மூ-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details