தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தியை நினைவு கூர்ந்த மோடி, பைடன் - காந்தி குறித்து ஜோ பைடன்

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பின் போது இருவரும் அண்ணல் காந்தியை நினைவு கூர்ந்து பேசியுள்ளனர்.

Narendra Modi
Narendra Modi

By

Published : Sep 25, 2021, 8:32 AM IST

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்த மோடி நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் அண்ணல் காந்தியை நினைவு கூர்ந்ததாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், "இன்னும் ஒரு வாரத்தில் அக்டோபர் 2ஆம் தேதியான காந்தியின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. காந்தியின் அகிம்சை, பொறுமை, நன்னடத்தை போன்ற பண்புகள் எந்த காலத்திற்கும் பொருந்தும்.

உலகில் வளம் படைத்தவர்களின் நடவடிக்கைகள், மனித குலத்தின் நலனை நோக்கி இருக்க வேண்டும் என விரும்பியவர் காந்தி. மூலதனத்தை விட தொழிலாளர்களே பிரதானமானவர்கள் என்று நம்பியவர் காந்தி. காந்தியின் இந்த பண்புகளை குறிப்பிட்டு பேசிய அதிபர் ஜோ பைடன், காந்தியின் கொள்கையின்படி இந்தியா-அமெரிக்கா உறவு முன்னகரும் என விரும்பினார். நானும் அவரது கருத்தை மனதார ஏற்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:மோடியின் அமெரிக்க பயணமும், தலைவர்களுக்கு வழங்கிய பரிசுப்பொருள்களும்...

ABOUT THE AUTHOR

...view details