குஜராத்தின் 17ஆவது முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று(செப் 12) பதவியேற்றுக்கொண்டார். குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்விரத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பூபேந்திர படேல் முன்னாள் முதலமைச்சரான ஆனந்திபென் படேலின் தீவிர ஆதரவாளர். முதலமைச்சர் பதவிக்கு தேர்வான பின் பூபேந்திர படேல், 'ஆனந்திபென் படேலின் ஆசி தனக்கு எப்போதும் உண்டு' என நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், விஜய் ரூபாணி தனது முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
புதிய முதலமைச்சர் பொறுப்புக்கு மன்ஷுக் மாண்டவியா, நிதின் படேல் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவந்த நிலையில், பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வானார்.