காந்திநகர்:குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 12) குஜராத் மாநில பாஜக தலைவர் பூபேந்திர படேல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் 2ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். குஜராத் மாநிலத்தின் 18ஆவது முதலமைச்சாரான படேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் கனுபாய் தேசாய், ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பல்வந்த் சிங் ராஜ்புத், குவர்ஜி பவாலியா, முலுபாய் பெரா, குபேர் திண்டோர், பானுபென் பாபரியா, பர்ஷோத்தம் சோலங்கி, பச்சுபாய் கபாத், முகேஷ் படேல், பிரபுல் பன்ஷேரியா, பிகுசின் பர்மர் மற்றும் குன்வர்ஜி ஹல்பதி உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், ஹர்ஷ் சங்கவி மற்றும் ஜகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார் - New Gujarat CM
குஜராத் மாநில பாஜக தலைவர் பூபேந்திர படேல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த புதிய அமைச்சரவையில் மூன்று படேல் சமூகத்தினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 பேருக்கும், பட்டியல் இனத்தை ஒருவருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், ஜெயின் ஒருவருக்கும், சத்திரியர் ஒருவருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் பூபேந்திர படேல் 1.92 வாக்குகள் வித்தியாசத்தில் கட்லோடியா தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
இதையும் படிங்க:உலகம் ஆயுர்வேதத்திற்குத் திரும்புகிறது: பிரதமர் மோடி