காந்திநகர்:குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.8) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தின் கட்லோடியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பூபேந்திர படேல், காலை 11 மணி நிலவரப்படி 80.86 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.
Gujarat Election Result: 80.86% வாக்குகளை பெற்றார் பூபேந்திர படேல்! - Ghatlodia Gujarat
குஜராத்தின் முக்கிய நட்சத்திர வேட்பாளரான பூபேந்திர படேல், தான் போட்டியிட்ட தொகுதியில் 80.86 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.
Gujarat Election Result: 80.86% வாக்குகளை பெற்றார் பூபேந்திர படேல்!
இதன் மூலம் பூபேந்திர படேல் வெளிப்படையாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் அமீ யாஜ்னிக் 6,071 வாக்குகளுடனும், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் விஜய் படேல் 4,167 வாக்குகளுடனும் உள்ளனர்.
இதையும் படிங்க:Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!