புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 850 கி.மீ தொலைவிலும், ஜகத்சிங்பூர் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 920 கி.மீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்திற்குத் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது புவனேஷ்வர் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு 'ஜவாத்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4), நாளை மறுதினம் (டிசம்பர் 5) ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.