தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உணவகத்தில் பயங்கர தீ விபத்து! - உணவகத்தில் தீ

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பருச்சில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயமந்திர் உணவகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

உணவகத்தில் பயங்கர தீ விபத்து!
உணவகத்தில் பயங்கர தீ விபத்து!

By

Published : Dec 9, 2020, 6:45 AM IST

குஜராத் மாநிலம் பருச்சில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயமந்திர் உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பருச் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உணவகத்தில் பயங்கர தீ விபத்து!

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள்!

ABOUT THE AUTHOR

...view details