தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!

By

Published : Jan 3, 2021, 11:17 AM IST

Updated : Jan 3, 2021, 1:36 PM IST

11:30 January 03

ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தர அமைப்பு அனுமதியளித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “ கரோனாவிற்கு எதிராக போராட மீண்டும் ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பட்டதன் மூலம், ஆரோக்கியமான, கரோனா இல்லாத தேசத்தை உருவாக்குவதில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதற்காக தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.

11:15 January 03

டெல்லி: அவசர கால நோக்கில் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு தர அமைப்பு இன்று (ஜன. 3) அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வி.ஜி. சோமானி, “கரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட்டும், பாரத் பயோடெக்கின் கோவாக்சினும் அவசர கால நோக்கில் கரோனா வைரஸுக்கு எதிராக போடப்படவுள்ளது. முன்னதாக, இந்த இரு அமைப்புகளும் தங்களின் சோதனை, மாதிரி தரவுகளை சமர்ப்பித்தன” எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 3, 2021, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details