தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் ஆந்திர அரசு - மத்திய அரசு தலையிட சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!

ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக குற்றஞ்சாட்டிய த.தே.கூ தலைவர் சந்திரபாபு நாயுடு, இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுயுள்ளார். இப்படி தனியுரிமை தகவவல்களை திருடுவது குற்றச்செயல்களுக்கும், மிரட்டுவதற்கும் வழிவகுக்கும் என்று தன் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Published : Aug 17, 2020, 4:15 PM IST

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அமராவதி (ஆந்திர பிரதேசம்): தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஜெகன் மோகன் அரசு ஒட்டுக்கேட்பதாக எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாடியிருக்கிறார்.

இச்சூழலில் இதுகுறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நடைபெறும் இந்த செயல் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் தடுக்கப்படாவிட்டால், நாட்டின் நேர்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என சந்திரபாபு நாயுடு தன் வாதத்தை கடிதத்தில் முன்வைத்துள்ளார்.

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

இதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி மக்களவை உறுப்பினரான ரகு ராம கிருஷ்ண ராஜூவும் தனது இரண்டு கைபேசிகளையும்சில மாதங்களாக மாநில புலனாய்வுத் துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details