ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு பயணம் செய்த அமைச்சர்கள் இருவரும் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகனை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணுமா முதலமைச்சருடனான சந்திப்பு? - ஜெகன் மோகன்
சென்னை: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jagan with TN Ministers
அமைச்சர்களுடன் சென்னை குடிநீர்வாரிய அலுவலர்களும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை சந்திக்கச் சென்றனர். ஜெகன்மோகனுடனான சந்திப்பின்போது, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.