மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இந்தாண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி இன்று உரையாற்றியுள்ளார். அதில் அவர், "நம் இளைஞர்கள் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட கருத்து உண்டு. அந்த அமைப்பு சரியான எதிர்வினை ஆற்றவில்லை என்றால், அதனை நோக்கி அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். இது சரியான செயலே.
அராஜகம், நிலையற்ற ஆட்சி, கலவரம், சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர். வரும் காலங்களில் நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு ஆற்றுவர்" என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில், மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.