கர்நாடகா மாநிலம் மைசூரை அடுத்த நடனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் புனித் குமார். சிறு வயது முதலே கலைத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், ஓவியம் சார்ந்த பல்வேறு படைப்புகளை உருவாக்கியதன் மூலம் தற்போது அங்குள்ள பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
60 நொடியில் பகத்சிங் ஓவியம் - உலக சாதனை படைத்த கர்நாடகா இளைஞர்
மைசூர்: ஒரு நிமிடத்தில் புரட்சியாளர் பகத்சிங்கின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து கர்நாடகா இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
Bhagatsingh
ஓவியராக சாதனை படைப்பதே லட்சியமாக கொண்டு உழைத்த புனித், தற்போது உலக சாதனை முயற்சியாக இந்திய விடுதலை புரட்சியாளர் பகத்சிங்கின் ஓவியத்தை வெறும் 60 நொடிகளில் தலைகீழாக வரைந்து அசத்தியுள்ளார்.
இவர் வரைந்த பகத்சிங் ஓவியம் உலக சாதனையில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், உலக சாதனைக்கான இந்திய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.