கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளிவருவோரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மருத்துவ எமர்ஜென்சி போன்ற சூழல் நிலவி வருகிறது.
இதனால் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நாடு முழுவதும் மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ''கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சானிடைசர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், அத்தியாவசிய மருத்துவ தேவைகளான பாராசிட்டமல் மாத்திரைகள், மருத்துவ பாதுகாப்பு உடைகள், வென்டிலேட்டர் ஆகிவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளிலும், மருந்தகத்திலும் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.