தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரின் தலைமை...’மனித நேய ஆளுமை’: சந்திரபாபு நாயுடு புகழாரம்

அமராவதி: பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு மனிதநேய ஆளுமையாக செயல்படுகிறது என சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

By

Published : Mar 28, 2020, 10:46 AM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் பல்வேறு தொழில்துறைகள் முடங்கியுள்ளன. இந்தியாவின் முதுகெலும்பு போல செயல்படும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து அதனை மேம்பட செய்ய வேண்டுமென சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில், அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “அதிக மக்கள் தொகை, பல தரப்பட்ட கலாசாரம் என பன்முகத்தன்மையின் சின்னமாக விளங்கும் இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமலானது. உங்கள் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட இந்த வெற்றிகரமான நடவடிக்கை, கரோனா பெருந்தொற்றை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்து, மற்ற நாடுகளுக்கு உதாரணமாகும் என்ற நம்பிக்கையளிக்கிறது.

சிறப்பு சலுகைகளாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் உதவி திட்டம் ஏழை எளிய மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கியுள்ளது, அவர்களின் தியாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதை.

மத்திய அரசு உங்கள் வழிகாட்டுதலின்பேரில் மனித நேயத்துடன் கூடிய நடவடிக்கைகளை எடுத்து சிறந்த ஆளுமையாக உருவெடுத்துள்ளது. ஆகையால், கரோனா போன்ற வைரஸை மட்டுமின்றி அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் விரைவில் ஈடுகட்டும். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படும் மிகச்சிறு, சிறு,குறு நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) பொருளாதாரத்திற்கும் நிதியுதவி செய்து மேம்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சண்டிகரில் முதன்முதலாக பதியப்பட்ட அறிகுறி இல்லா கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details