தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொண்டாட்டத்தின் உச்சம்; நச்சென்று முத்தம்! காணொலி உள்ளே - ஹைதராபாத்

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறும் 'பொனாலு' என்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது காவலர் ஒருவருக்கு நச்சென்று முத்தம் கிடைத்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

வைரல் வீடியோ

By

Published : Jul 30, 2019, 9:32 AM IST

Updated : Jul 30, 2019, 9:37 AM IST

தெலங்கானா மாநிலம் முழுவதும் 'பொனாலு' திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்விழாவில் மகா காளியை பல்வேறு அவதாரங்களில் மக்கள் வணங்குகின்றனர். 2014ஆம் ஆண்டு இந்த விழாவை மாநில பண்டிகையாக அம்மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'பொனாலு' திருவிழாவில் மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக இளைஞர்கள் கொண்டாடிவந்தனர். அப்போது ஒரு இளைஞர் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு 'நச்சென்று' முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர், அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டார்.

வைரல் வீடியோ

இந்தச் சம்பவத்தின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Last Updated : Jul 30, 2019, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details