தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உடல் உறுப்புகளை விற்க அனுமதி தேவை' - ஆந்திர இளைஞர் தந்த அதிர்ச்சி! - உடல் உறுப்பை விற்கத்துடிக்கும் இளைஞன்

சித்தூர்: ஆந்திர மாநிலம் குராபலகோட்டா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வாழ்வாதாரத்துக்காக தனது உடல் உறுப்புகளை விற்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சீட்டாட்டத்தில் திறமைக் கொண்ட பவாஜி

By

Published : Oct 31, 2019, 11:03 AM IST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குராபலகோட்டா பகுதியைச் சேர்ந்தவர் பவாஜி. ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர், தனது பத்து வயதிலேயே சீட்டாட்டத்திற்கு அடிமையானார். அதன்மூலம் கோடிக்கணக்கில் பணமும் சம்பாதித்துள்ளார்.

சீட்டாட்டத்தில் வல்லமை பெற்ற பவாஜியிடம் ஏதேனும் எண்ணைக் கூறி அவற்றை எடுத்துத்தரக் கூறினால், சீட்டைப் பார்க்காமலேயே சரியான சீட்டை எடுத்துத்தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.

ஆனால், தற்போது சீட்டாட்டத்தை கைவிடப்போவதாக தெரிவித்த பவாஜி, 'இனிமேல் யாரையும் ஏமாற்றப்போவதில்லை நான் உயிர்வாழ - எனது உடல் உறுப்புகளை விற்றுக்கொள்கிறேன். அதற்கு அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்' என சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளுக்கு பதில் அளித்த அலுவலர்கள், அவரது பெற்றோரிடம் இது குறித்துப் பேசுவதாகவும் அவரது மனநிலையை கவனிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : உடல் பருமன் அதிகரிப்பு உள்ளூர் பிரச்னை அல்ல; உலக பிரச்னை!

ABOUT THE AUTHOR

...view details