உத்தரப் பிரதேச மாநிலம் ஜுஹான்பூர் மாவட்டத்தில் உள்ள சராய் குவாஜா என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழத்தோட்டத்திலிருந்து மாம்பழங்களை பறிப்பது தொடர்பாக எழுந்த தகராறில் அப்பகுதியில் இருந்த பட்டியலின மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.
வீடுகளை எரித்தவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்- யோகி
லக்னோ: பட்டியலின மக்களின் வீடுகளை எரித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
yogi
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கவும் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலருக்கு உத்தரவிட்டதோடு, மாநில அரசின் சமூக நலத்துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் யோகி உத்தரவிட்டுள்ளார்.