2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அருதிப் பெரும்பாண்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. இந்நிலையில், மோடி அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதனையொட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "முதல் ஆண்டில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பிரதமர் மோடி முன்னணியில் நின்று குறுகிய காலத்தில் துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டுள்ளார்.
கோவிட்-19ஐ கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறிவரும் சூழலில், இந்தியாவில் அதன் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பொது ஊரடங்கை அறிவித்ததனாலேயே, அதனை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
நாட்டின் தேவைக்காகத் தினம்தோறும் 4.5 லட்சம் பாதுகாப்பு கருவிகள், 58 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.