கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும், இழப்புகளையும் ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசுகள் மக்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் என்பது போன்ற நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் ஏற்படும் நாட்டின் பொருளாதார இழப்பீடு குறித்தும், பொதுமக்களின் பாதிப்பு குறித்தும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.