இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா’.
பிரபல மல்யுத்த வீரர்களான வினீஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் மல்யுத்தத்தில் உலகளவில் தங்களது பெயர்களை நிலைநாட்டியுள்ளனர்.

கடந்த வருடம் பஜ்ரங் புனியா ஆசிய போட்டியில் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதே போல் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் 50 கிலோ மல்யுத்த பிரிவில் வினீஷ் போகத் தங்கம் வென்றார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் பிரபல மல்யுத்த வீரர்களான வினீஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோரது பெயர்களை 2019 ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.