தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியலுக்காக அரசு வேலையை கைவிட்ட இந்திய வீராங்கனை - BJP

சண்டிகர்: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது அரசு வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்
சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்

By

Published : Oct 7, 2020, 7:24 PM IST

சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் களம் கண்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்காக தான் முழு வீச்சில் அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ள அவர், தனது ஹரியானா மாநில விளையாட்டு துறை துணை இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பரோடா தொகுதியில் தான் போட்டியிட உள்ளேன். இதற்காக அரசியல் களத்தில் முழுவீச்சில் இறங்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தந்தை மகாவீர் சிங்குடன் பாஜகவில் இணைந்த வீராங்கனை பபிதா போகத், தனது காவல் உதவி ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details