தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கும் உலகில் மிகப்பெரிய குரான் - ராஜஸ்தான் தற்போதைய செய்தி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உலகின் மிகப்பெரிய குரானை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள், அப்பகுதிக்கு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் உலகில் மிகப் பெரிய குரான்
சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் உலகில் மிகப் பெரிய குரான்

By

Published : Oct 13, 2020, 2:32 PM IST

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் நகரில் உலகிலேயே மிகப்பெரிய குரான் உள்ளது. இந்தக் குரானானது மவுலானா அபுல் கலாம் ஆசாத் அரபு பாரசீக ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 10 அடி ஐந்து அங்குலம் நீளமும் 7 அடி ஆறு அங்குலம் அகலமும் கொண்டுள்ள இந்தக் குரானைக் காண ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள், டோங்க் நகருக்கு வருவது வழக்கம்.

இது குறித்து மவுலானா அபுல் கலாம் ஆசாத் அரபு பாரசீக ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மவுலானா ஜமீல் அகமது கூறுகையில், "சித்தோல்கர் நகரைச் சேர்ந்த ஹாஜி முகமது ஷெர்கான் என்பவரின் வேண்டுகோளின்பேரில் குரானின் இந்த அரிய பதிப்பு தொகுக்கப்பட்டது.

இந்த முழு பதிப்பும் இங்கு டோங்க் நகரிலேயே தொகுக்கப்பட்டது. கையால் செய்யப்பட்ட தாளே இதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்தக் குரானில் பயன்படுத்தப்பட்ட காகிதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதே வேலையில் இதில் பயன்படுத்தப்படும் மை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது" என்றார்.

மேலும், இந்தக் குரானை தொகுக்க எந்தவிதமான இயந்திரங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் பலத்த மழை: காக்கிநாடாவில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ABOUT THE AUTHOR

...view details