உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம் மைசூர் மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு சுல்தான் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்கிருந்து ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக ராக்கெட்டுகளை செலுத்தி வந்தனர். எனவே இது ராக்கெட் ஏவுதளம் என்று அழைக்கப்படுகிறது. நான்கு பக்கங்களிலும் பெரிய சுவர். இந்த கட்டிடத்தில் இருந்து தான் ராக்கெட் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
அலுவலர்கள் அலட்சியம்: உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம் அழிப்பு - திப்பு
மைசூர்: திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் ராக்கெட் ஏவுதள மையம் அலுவலர்களின் அலட்சியத்தால் அழிக்கப்பட்டுள்ளது.
rocket launch site
இது உலகின் முதல் ராக்கெட் ஏவுதளமாக இருந்தபோதிலும், அலுவலர்களின் அலட்சியத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த இடத்தை உள்ளூர் வாசிகள் கிரிக்கெட் விளையாடும் மைதனங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
தொல்பொருள் துறை சட்டப்படி, பழங்கால கட்டடங்கள் இருக்கம் பகுதிகளின் 300 மீட்டர் தொலைவில், எந்த கட்டடத்தையும் கட்டக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு எந்த சட்ட விதிகளும் பின்பற்றமால் அருகில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.